/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கொடிமரம்; நுழைவாயில் கும்பாபிஷேகம்
/
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கொடிமரம்; நுழைவாயில் கும்பாபிஷேகம்
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கொடிமரம்; நுழைவாயில் கும்பாபிஷேகம்
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கொடிமரம்; நுழைவாயில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 07, 2025 10:36 PM

அவிநாசி; சேவூரில் உள்ள பிரசித்தி பெற்ற அறம்வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ் வரர் கோவிலில் கொடிமரம் நுழைவாயில் கும்பாபிஷேகம், முதலாமாண்டு விழா ஆகியவை நடந்தன.
நேற்று முன்தினம் கோவிலில் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நேற்று இரண்டாம் காலயாக பூஜை, கலச புறப்பாடு ஆகியவை நடந்தன. தொடர்ந்து, நுழைவாயில் கும்பாபிஷேகம், கொடி மரம், கொடிமர விநாயகர் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின், வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு கலச அபிஷேகம், திரவிய அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.