ADDED : மே 18, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : கோர்ட் உத்தரவிட்ட பின்பும், அரசியல் கட்சியினர் தங்கள் கொடிக்கம்பங்களை அகற்றாத நிலையில், மாநகராட்சி அலுவலர்கள் களம் இறங்கிர் மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 647 கொடிக்கம்பங்கள் அமைந்துள்ளன. இவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டதையடுத்து கடந்த மூன்று நாட்களாக மாநகராட்சி ஊழியர்கள் ஆங்காங்கே கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நடவடிக்கையில் இதுவரை, 78 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநகராட்சி ஊழியர்கள் அதிரடியாக களம் இறங்கி, கொடிக்கம்பங்களை அகற்றிய நிலையில், அவற்றை கட்சி நிர்வாகிகளே வந்து தங்கள் பொறுப்பில் பெற்றுச் சென்றனர்.