ADDED : ஜூன் 22, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: ஐகோர்ட் உத்தரவின்படி, ஏப்., 21ம் தேதியுடன் காலக்கெடு நிறைவடைந்த நிலையில், பல்வேறு பொது இடங்களில் இன்னும் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமலேயே உள்ளன.
குறிப்பாக, ஊரகப் பகுதிகளில், இது தொடர்பாக ஊராட்சி இன்னும் உத்தரவு வழங்கவில்லை என்று கூறி, அரசியல் கட்சியினர், அமைப்பினர் கொடிக்கம்பங்களை அகற்றாமல் உள்ளனர்.
கோர்ட் உத்தரவை செயல்படுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.