/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைகளை பாதிக்கும் ஈக்கள்; கட்டுப்படுத்த அறிவுறுத்தல்
/
கால்நடைகளை பாதிக்கும் ஈக்கள்; கட்டுப்படுத்த அறிவுறுத்தல்
கால்நடைகளை பாதிக்கும் ஈக்கள்; கட்டுப்படுத்த அறிவுறுத்தல்
கால்நடைகளை பாதிக்கும் ஈக்கள்; கட்டுப்படுத்த அறிவுறுத்தல்
ADDED : டிச 17, 2024 09:57 PM
உடுமலை; மழைக்காலத்தில், கால்நடைகளை பாதிக்கும் ஈக்களை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என, கால்நடை துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து, அத்துறையினர் கூறியதாவது; மழைக்காலத்தில் பல வகையான ஈக்களால் கால்நடைகள் பாதிக்கின்றன. அதில், கொம்பு ஈ ஒரு வகையாகும்.
இந்த ஈக்கள் கடிப்பதால் வலி, தொந்தரவு, உணவு உண்ணுதல் ஓய்வு போன்ற கால்நடைகளின் தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படும். இவை ரத்தம் உறிஞ்சுவதற்காக தோலை கடித்து வலி ஏற்படுத்துகிறது. இவ்வாறு அடிக்கடி கடிப்பதால் உடல் எடை இழப்பு, பால் உற்பத்தி குறைவு, போன்றவை ஏற்படும். இந்த ஈக்கள் முதுகிலும், பின் பகுதிகளிலும் கூட்டமாக காணப்படும்.
இவை ஊசிபோன்ற வாய்ப்பாகத்தை உட்செலுத்தி, ரத்தத்தை உறிஞ்சுவதால் பித்தப்பை நோய் போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
கொம்பு ஈக்கள் சாணத்தை உணவாக உண்டு, 3-5 நாட்களில் 3 படிநிலைகளை கடந்து வளர்ச்சியடைகின்றன. ஒரே பெண் ஈ 200 முட்டைகள் வரை இடும். வளர்ந்த பெண் ஈக்கள் ஒரு நாளைக்கு, 20 முறை வரை அடிக்கடி உணவு உட்கொள்ளும்.
எனவே கட்டுப்பாடு முறைகளை எளிதாக மேற்கொள்ளலாம். பொடி துாவுவதல், மருந்து தெளித்தல், நீரில் அமிழ்த்துதல் போன்ற முறைகளால் நல்ல பயன் பெறலாம். உணவுப்பொருட்களில் புழுக்கள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.