/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்திமலை கோவிலை சூழ்ந்த வெள்ளம்
/
திருமூர்த்திமலை கோவிலை சூழ்ந்த வெள்ளம்
ADDED : டிச 14, 2024 02:46 AM

உடுமலை:திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலை மேலுள்ள பஞ்சலிங்க அருவி மற்றும் மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
திருமூர்த்தி மலைப்பகுதிகளில், இரு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பஞ்சலிங்க அருவியில், பல அடி உயரத்திற்கு நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதோடு, அருவிக்கு செல்லும் நடைபாலம் வரை வெள்ளநீர் ஓடி வருகிறது.
அதேபோல், மலையடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை, நேற்று முன்தினம், இரவு, 7:45 மணிக்கு, வெள்ளநீர் சூழ்ந்தது.
படிப்படியாக, வெள்ளநீர் ஆர்ப்பரித்து வந்ததோடு, கன்னிமார் கோவில், அமணலிங்கேஸ்வரர் கோவில், விநாயகர் கோவில் என பல அடி உயரத்திற்கு வெள்ளநீர் ஓடியது.
பல ஆண்டுக்குப் பின், கோவில் வளாகம் காட்டாற்று வெள்ளத்தால் சூழ்ந்ததால், 2வது நாளாக நேற்றும் பக்தர்கள், சுற்றுலா பயணியர், அருவி மற்றும் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

