ADDED : அக் 28, 2025 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: மழையால், பூக்கள் வரத்து உடுமலைக்கு குறைந்து விலை அதிகரித்து காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து, உடுமலை சந்தைக்கு மல்லி உள்ளிட்ட பூக்கள் வரத்து நாள்தோறும் உள்ளது. மழை காரணமாக, மல்லி உட்பட பூக்களின் வரத்து குறைந்துள்ளது. அதே வேளையில், கோவில் விசேஷம் மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக, பூக்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பு, வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.
நேற்று கிலோ மல்லி, 1,400 ரூபாய்க்கு விற்பனையானது. முல்லை கிலோ ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது.

