/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரத்து குறைவால் பூக்கள் விலை 'கிடுகிடு'
/
வரத்து குறைவால் பூக்கள் விலை 'கிடுகிடு'
ADDED : நவ 19, 2024 06:34 AM
திருப்பூர்; திருப்பூர், பூ மார்க்கெட்டில் நேற்று மல்லிகை பூ ஒரு கிலோ, 1,200 ரூபாய், முல்லை, 800 ரூபாய், அரளி, 160, செவ்வந்தி, 200, சம்பங்கி, 180 ரூபாய்க்கு விற்றது.
மல்லிகை, முல்லை விலை உயர்வால், காக்கடா பூவை பலரும் தேடினர். இதனால், வழக்கமாக, 60 முதல், 80 ரூபாய்க்கு விற்கும் காக்கடா பூ நேற்று கிலோ, 120 ரூபாய்க்கு விற்றது.
அவ்வப்போது, துாறல் மழை குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவினாலும், மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. காடுகளில் துளசி அதிகளவில் தழைவதால், மார்க்கெட்டுக்கு மூட்டை மூட்டையாக வந்து குவிகிறது.
நேற்று, இரண்டு கட்டு, 15 ரூபாய்க்கு துளசி விற்கப்பட்டது. வழக்கமாக தேய்பிறை முகூர்த்த நாட்களில், பூக்கள் விலை குறைந்திருக்கும். தற்போது வரத்து குறைவால், பூ விலை உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

