
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் : பல்லடம், நால்ரோடு சிக்னல் அருகே, ஆதரவற்ற முதியவர் ஒருவர், கடந்த ஒரு மாதமாக, நடக்கவும் முடியாமல், மழையிலும், குளிரிலும் முடங்கி கிடந்தார். முதியவருக்கு பொதுமக்கள் உணவு, தண்ணீரை வழங்கி வந்தனர்.
இதுகுறித்து கடந்த, 7ம் தேதி 'தினமலர்' திருப்பூர் பதிப்பில் செய்தி வெளியானது.
நேற்று காலை, பல்லடம் ஈகை அறக்கட்டளை நிர்வாகிகள், முதியவருக்கு முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து பின், புத்தாடை அணிவித்து உணவு உண்ண வைத்தனர். ஆம்புலன்ஸ் வாயிலாக, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சைக்கு பின், ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.