/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பறக்கும் படை தயார் அரசியல் கட்சிகள் 'டெக்னிக்' புரியணுமே
/
பறக்கும் படை தயார் அரசியல் கட்சிகள் 'டெக்னிக்' புரியணுமே
பறக்கும் படை தயார் அரசியல் கட்சிகள் 'டெக்னிக்' புரியணுமே
பறக்கும் படை தயார் அரசியல் கட்சிகள் 'டெக்னிக்' புரியணுமே
ADDED : மார் 11, 2024 01:46 AM

திருப்பூர்;தேர்தல் விதிமீறல்களை கண்டறிந்து தடுப்பதற்காக, திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளுக்கு, 384 நபர்களுடன், பறக்கும்படை உள்ளிட்ட 64 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் எட்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாகம், லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டுவருகிறது.
மண்டல தேர்தல் அலுவலர்கள் 240 பேர், துணை மண்டல தேர்தல் அலுவலர்கள் 240 பேர் என, 480 பேர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் அறிவிப்பு வெளியான உடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக, பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக்குழு ஆகிய மூன்று வகை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு தொகுதிக்கு தலா 3 பறக்கும்படை; 3 நிலை கண்காணிப்புக்குழு; 2 வீடியோ கண்காணிப்புக்குழு வீதம், எட்டு சட்டசபை தொகுதிக்கு மொத்தம் 64 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பறக்கும்படையில், தாசில்தார் நிலையிலான அதிகாரி தலைமையில், எஸ்.எஸ்.ஐ., ஒருவர், நான்கு போலீசார் என 6 பேர் இடம்பெறுகின்றனர். ஒரு அதிகாரி தலைமையில், வீடியோ பதிவாளர், 4 போலீசார் என, 6 பேர் கொண்ட நிலை கண்காணிப்புக்குழு; ஒரு அதிகாரி, வீடியோ பதிவாளர், 2 போலீசார் வீதம் 4 பேர் அடங்கிய வீடியோ கண்காணிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்குழுக்களில், 380க்கும் மேற்பட்டோர் பணிபுரிய தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே, இந்த குழுவினர் களமிறங்கிவிடுவர்.
பறக்கும்படை குழு, தொகுதி முழுவதும் முழு நேரமும் ரோந்து சுற்றிவந்து, வாகன தணிக்கைகளில் ஈடுபடும்; நிலை கண்காணிப்புக்குழு, ஆங்காங்கே ஒரு மணி நேரம் வீதம் நின்றுகொண்டு, தணிக்கையில் ஈடுபடும். வீடியோ கண்காணிப்புக்குழு, வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம், பிரசார கூட்டங்களுக்குச்சென்று, நிகழ்வுகளை பதிவு செய்யும்.
பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழுக்கள் ஒவ்வொன்றும், நாளொன்றுக்கு தலா எட்டு மணி நேரம் வீதம், மூன்று 'ஷிப்ட்' அடிப்படையில் இயங்கும். வீடியோ கண்காணிப்புக்குழு, இரவு நீங்கலாக, நாளொன்றுக்கு இரண்டு 'ஷிப்ட்' என்கிற அடிப்படையில் செயல்படும். ஓட்டுப்பதிவு நெருங்கும் நேரத்தில் தேவைக்கு ஏற்ப, குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

