/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிந்தையில் கவனம்; மனதில் தெளிவு: கல்லுாரி - படிப்பு தேர்வு அதிமுக்கியம்
/
சிந்தையில் கவனம்; மனதில் தெளிவு: கல்லுாரி - படிப்பு தேர்வு அதிமுக்கியம்
சிந்தையில் கவனம்; மனதில் தெளிவு: கல்லுாரி - படிப்பு தேர்வு அதிமுக்கியம்
சிந்தையில் கவனம்; மனதில் தெளிவு: கல்லுாரி - படிப்பு தேர்வு அதிமுக்கியம்
ADDED : ஜூன் 30, 2025 12:27 AM

திருப்பூரில் 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன் பேசியதாவது:
இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் முன்பு, எந்த கல்லுாரி, என்ன படிப்பு என்ற முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கல்லுாரி, ஒரு பாடப்பிரிவு என தேர்வு செய்யாமல், வெவ்வேறு கல்லுாரி, வெவ்வேறு பாடப்பிரிவுகளை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
'சாய்ஸ் பில்லிங்'கில் மிக கவனமுடன் இருக்க வேண்டும் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யும் போது, சரியான இணைய தளத்தில் (https://www.tneaonline.org) பதிவு செய்ய வேண்டும். கல்லுாரிகளை தரவரிசைப்படுத்திக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
கல்லுாரி பெயர், கவுன்சிலிங் கோடு எண்ணுடன் வரிசைப்படுத்திக் கொண்டு தவறின்றி விண்ணப்பிக்கவேண்டும்.
அனைத்து தகவல்களும் உங்கள் முன் இருக்கும். இருப்பினும், அனைத்து கல்லுாரிகள் குறித்த தகவல்களையும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
முதலில் 'சாய்ஸ்' என்ன என்பதை தெளிவாக தீர்மானித்து பதிவு செய்ய வேண்டும்.கடந்த ஐந்து ஆண்டுகள் கட்-ஆப் விபரங்களை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். அதை அறிந்தால் தான் உங்கள் விருப்பக் கல்லுாரியில் இடம் கிடைக்குமா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
தேர்வு செய்த கல்லுா ரியை உறுதி செய்ய வேண்டும். கல்லுாரி, பாடப்பிரிவு தேர்வு செய்த பின், தேர்வு செய்யப்பட்ட கல்லுாரிக்கு நேரடியாக சென்று கட்டணம் செலுத்தி சேர்ந்து கொள்ளலாம்.
காலதாமதம் கூடாது
''விண்ணப்பிக்கும் போது 'லாக்' செய்தவுடன், பாஸ்வேர்டு வழங்கப்படும். 'பாஸ்வேர்டு, யூசர் ஐ.டி.,' யாரிடமும் பகிர வேண்டாம். வங்கி கூறுவதை போல், நாங்கள் இங்கேயும் கூறுகிறோம். நீங்கள் கல்லுாரிகள், பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய, மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். மூன்று நாட்களில் மாற்றம் செய்து கொள்ள விரும்பினால் பாடப்பிரிவு, கல்லுாரிகளை மாற்றி கொள்ளலாம்; காலதாமதம் கூடாது'' என்றார் அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன்.