/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காசநோயாளிக்கு உணவு பெட்டி; ஐ.எம்.ஏ., டெக்சிட்டி வழங்கல்
/
காசநோயாளிக்கு உணவு பெட்டி; ஐ.எம்.ஏ., டெக்சிட்டி வழங்கல்
காசநோயாளிக்கு உணவு பெட்டி; ஐ.எம்.ஏ., டெக்சிட்டி வழங்கல்
காசநோயாளிக்கு உணவு பெட்டி; ஐ.எம்.ஏ., டெக்சிட்டி வழங்கல்
ADDED : மார் 26, 2025 11:32 PM

அவிநாசி; காசநோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, காசநோயில்லா சூழலை உருவாக்க தேசிய சுகாதார இயக்கம் முனைப்புக் காட்டி வருகிறது. காசநோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையுடன், புரோட்டீன் சத்து நிறைந்த, உணவுப் பொருட்களை உட்கொள்வதும் நோயின் தாக்கத்தை வேகமாக கட்டுப்படுத்தி, குணம் பெற உதவும். இதில், தன்னார்வ அமைப்பினரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவிநாசி அரசு மருத்துவமனை, ஐ.எம்.ஏ., டெக்சிட்டி மற்றும் அவிநாசி மாதேஸ்வரி மெடிக்கல் சென்டர் இணைந்து, காசநோயாளிகளுக்கு புரோட்டீன் உணவு வழங்கும் திட்டத்தை, நேற்று துவக்கின.
இது குறித்து, ஐ.எம்.ஏ., டெக்சிட்டி செயலாளர் டாக்டர் பிரகாஷ் கூறுகையில், ''இத்திட்டம் வாயிலாக, அவிநாசி அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு, புரதச்சத்து நிறைந்த கடலை, முட்டை, பால் பொருட்கள் மற்றும் சத்து சேர்க்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும். இதனால், காசநோயாளிகள் விரைவில் குணம் பெற முடியும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், ஐ.எம்.ஏ., டெக்ஸ்சிட்டி முன்னாள் செயலாளர் டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் ஹரிவீர விஜயகாந்த், அவிநாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) டாக்டர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர். காசநோய் பிரிவு பொறுப்பாளர் டாக்டர் விண்ணரசன் நன்றி கூறினார்.