ADDED : நவ 25, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை விழா அன்னதானத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீஐயப்பன் கோவிலில், ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஐயப்பன் பக்த ஜன சங்கம் சார்பில், 65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், உற்சவ பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று காலை, பவானி கூடுதுறையில், ஐயப்ப சுவாமி ஆராட்டு விழா நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்ப சுவாமி ஊர்வலம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியாக, ஞாயிறு தோறும் கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில், அன்னதானம் வழங்கப்படுகிறது. இரண்டாவது வாரமாக அன்னதானம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.