/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெல்லம் உற்பத்தி ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
/
வெல்லம் உற்பத்தி ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
வெல்லம் உற்பத்தி ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
வெல்லம் உற்பத்தி ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
ADDED : ஜன 09, 2025 11:36 PM

உடுமலை, ;மடத்துக்குளம் பகுதிகளிலுள்ள, வெல்லம், நாட்டுச்சர்க்கரை உற்பத்தி ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
உடுமலை அருகே மடத்துக்குளம் பகுதிகளில், வெல்லம், நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இவற்றில் வெல்லம் தயாரிக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், உணவு பாதுகாப்புத் துறை, திருப்பூர் மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர், மடத்துக்குளம் தாலுகா, சாமராயபட்டி, குமரலிங்கம், வேடப்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்யும், 9 ஆலைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வெல்லத்தில் கலப்படம் செய்ய வைத்திருந்த, 500 கிலோ அஸ்கா சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், வெல்லத்தில் செயற்கை வண்ணம் மற்றும் இதர வேதிப்பொருட்கள் ஏதாவது கலப்படம் உள்ளதா என கண்டறியும் வகையில், தொழிற்சாலைகளில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆய்வக பரிசோதனையில், பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என்று அறிக்கை பெறப்பட்டால், ஆலையின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், வெல்லம், நாட்டுச்சர்க்கரை தயாரிக்கும் தொழிற்சாலைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பூச்சித்தொற்று இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். உணவுப்பொருள் தயாரிக்க செயற்கை நிறமிகள் பயன்படுத்தக்கூடாது, ஆலைகளில் தயாரிக்கப்படும் வெல்லம், அடர் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும், எனவும் அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் உணவுப்பொருள் குறித்து, 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
வெல்லம் உற்பத்தியாளர்கள், உணவு பாதுகாப்புத்துறையினர் கூறும் அறிவுரைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

