/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு 36 கிலோ இறைச்சி அழிப்பு
/
உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு 36 கிலோ இறைச்சி அழிப்பு
உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு 36 கிலோ இறைச்சி அழிப்பு
உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு 36 கிலோ இறைச்சி அழிப்பு
ADDED : நவ 14, 2024 04:38 AM

உடுமலை: உடுமலை பகுதியிலுள்ள கடைகளில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோடீஸ்வரன், பாலமுருகன், மோகனரங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
உடுமலை நகரில் செயல்பட்டு வரும் அசைவ மற்றும் சைவ உணவகங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது கெட்டுப்போன, 36 கிலோ இறைச்சி மற்றும் 11 கிலோ சமோசா, பப்ஸ், உணவு பொருட்களில் பயன்படுத்தும் மசால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது.
மேலும் சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்ட, 4 கடைகளுக்கு தலா ரூ.ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவுப்பொருளை பேக்கிங் செய்ய, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகளை பயன்படுத்திய, இரண்டு கடைகளுக்கு, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள் தரமானதாகவும், பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
அசைவ மூலப்பொருட்களை, தினசரி தேவைக்கு ஏற்ப வாங்கி பயன்படுத்தவும், இறைச்சி உள்ளிட்ட உணவு தயாரிக்க பயன்படும் அனைத்து மூலப்பொருட்களையும் வாங்கியதற்கான ரசீது கடையில் வைத்திருக்கப்பட வேண்டும்.
உணவு தயாரிக்கும் பகுதி, சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பூச்சித்தொற்று இல்லாதவாறு இருக்கவும், தயாரிக்க பயன்படுத்தக்கூடிய குடிநீர் தரமானதாகவும், பயன்படுத்தும் பாத்திரங்கள் சுத்தமாக பராமரிக்கவும், உணவுப்பொருள் தயாரிக்க செயற்கை நிறமிகள் பயன்படுத்தக்கூடாது, என அறிவுறுத்தப்பட்டது.
பொதுமக்கள் உணவுப்பொருள் குறித்து, 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம், என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.