ADDED : டிச 18, 2024 11:19 PM
திருப்பூர்; காலி பணியிடங்களை நிரப்ப கோரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரகலா வரவேற்றார். மாநில செயலாளர் செந்தில்குமார், கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
சத்துணவு ஊழியர்கள் திரளானோர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். காலை உணவு திட்டத்தை, சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்தவேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு, அகவிலைப்படியுடன் கூடிய குறைந்தபட்ச பென்ஷனான 6,750 ரூபாயை வழங்கவேண்டும்.
மூவாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் சத்துணவு ஊழியர்களை நியமனம் செய்வதை அரசு கைவிடவேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என, வலியுறுத்தினர்.
சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.