/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊட்டச்சத்து உணவுக்கா... கால்நடைத் தீவனத்துக்கா! சிறுதானிய உற்பத்தி எதற்காக?
/
ஊட்டச்சத்து உணவுக்கா... கால்நடைத் தீவனத்துக்கா! சிறுதானிய உற்பத்தி எதற்காக?
ஊட்டச்சத்து உணவுக்கா... கால்நடைத் தீவனத்துக்கா! சிறுதானிய உற்பத்தி எதற்காக?
ஊட்டச்சத்து உணவுக்கா... கால்நடைத் தீவனத்துக்கா! சிறுதானிய உற்பத்தி எதற்காக?
ADDED : மே 29, 2025 12:55 AM
காங்கயம்,; ''சிறுதானியங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் 37 ஆயிரம் எக்டரில் சோளம் பயிரிடப்பட்டாலும் பெரும்பாலும் கால்நடைத் தீவனத்துக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது'' என்று வேளாண் அதிகாரி வேதனை தெரிவித்தார்.
ஊட்டச்சத்துமிக்க சிறு தானியங்கள் உற்பத்திக்கு மானியம் வழங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம், காங்கயம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சிறுதானிய உணவு அவசியமானது
காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி பேசியதாவது: நாம் தினமும் அதிகளவில் உட்கொள்ளும் அரிசி உணவில், கார்போ ைஹட்ரேட் சத்து மட்டுமே உள்ளது. உடல் ஆரோக்கியம் மேம்பட அரிசி உணவுடன், புரோட்டீன் உள்ளிட்ட ஊட்டச்சத்துமிக்க சிறு தானியங்களான சோளம், கம்பு, ராகி, தினை, வரகு, சாமை போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வும் அதிகளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது; இதனால், சிறுதானியங்களின் உற்பத்தியை பெருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கிறது.
சிறுதானிய உற்பத்திக்கு மானிய நிதி ஒதுக்கீடு
ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ், நம் மாவட்டத்தில், 37 ஆயிரம் எக்டர் பரப்பளவில் சோளம் பயிரிடப்பட்டாலும், பெரும்பாலும் தீவனத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே, தட்டுடன் தானிய மகசூலையும் அதிகளவில் தரக்கூடிய, 'கோ -32' ரக சோளப்பயிர் சாகுபடி ஊக்குவிக்கப்படுகிறது.
அதற்கு உற்பத்தி மற்றும் வினியோக மானியம், இடுபொருட்களான உயிர் உரம், நுண்சத்து, உயிரியல் காரணிகள், தெளிப்பு நீர்பாசன உரங்கள், செயல் விளக்க திடல்கள் உள்ளிட்டவை மானியத்தில் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், சிறுதானிய உற்பத்திக்காக காங்கயம் வட்டாரத்துக்கு, 13 லட்சம் ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது; விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் மற்றும் வேளாண் அலுவலர்கள் பங்கேற்றனர்.