ADDED : டிச 05, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், நாளை நடக்கிறது.
உடுமலை வனஎல்லைக்குட்பட்ட கிராமங்களில், காட்டுப்பன்றி, யானை, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதற்கு இழப்பீடு மற்றும் தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் வனத்துறையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை (6ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நடக்கிறது. எனவே, விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என, உடுமலை வனச்சரக அலுவலர் வாசு தெரிவித்துள்ளார்.

