ADDED : டிச 04, 2025 08:07 AM
திருப்பூர்: கலெக்டர் மனிஷ்நாரணவரே அறிக்கை:
பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் மூன்று ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும், மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது. இளங்கலை, முதுகலை பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல்இருக்க வேண்டும்.
2025- 26ம் கல்வியாண்டில், கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு, மாணவ, மாணவியருக்கு, கல்லுாரி வாயிலாக வழங்கப்பட்டுள்ள யு.எம்.ஐ.எஸ்., எண் வாயிலாக, https://umis.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விண்ணப்பிக்க, இம்மாதம் 31ம் தேதி கடைசிநாள்.
இவ்வாறு கலெக்டர் அதில் கூறியுள்ளார்.

