/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூதாட்டியிடம் நகை பறிப்பு: குடந்தை ஆசாமிகள் கைது
/
மூதாட்டியிடம் நகை பறிப்பு: குடந்தை ஆசாமிகள் கைது
மூதாட்டியிடம் நகை பறிப்பு: குடந்தை ஆசாமிகள் கைது
மூதாட்டியிடம் நகை பறிப்பு: குடந்தை ஆசாமிகள் கைது
ADDED : டிச 04, 2025 08:08 AM
பல்லடம்: பல்லடம் அடுத்த, கரையாம்புதுாரை சேர்ந்தவர் நாச்சம்மாள் 78. கடந்த நவ. 29 அன்று, வீட்டில் தனியாக இருந்த இவரிடம், மர்ம ஆசாமிகள் இருவர், 10 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக, கும்ப கோணத்தைச் சேர்ந்த பிரபு, 41, உசேன் முகமது, 38 ஆகியோரை பல்லடம் போலீசார் கைது செய்தனர். பிரபு, கரையாம்புதுாரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
நாச்சம்மாளின் வீட் டுக்கு, தென்னை மட்டை எடுப்பதற்காக அடிக்கடி வந்து செல்வது வழக்கம். பிரபு, அவரது நகைகளை பறிக்க திட்டமிட்டு, நண்பன் உசேன் முகமதுவை வரவழைத்தார்.
இருவரும் இணைந்து, நகைகளை பறித்துச் சென்றனர். இவர்கள் மீது கும்பகோணம் போலீஸ் ஸ்டேஷனில், இரண்டு திருட்டு வழக்குகள் உள்ளன.