ADDED : செப் 03, 2026 05:57 AM

அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
அருகே வட்டக்காடு குமரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம்,
65, விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில், ,தொழிலாளர்கள் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தபோது, மலைப்பாம்பு
ஒன்று படுத்திருந்ததை கண்டனர்.
இதுகுறித்து, அந்தியூர்
வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர்
செல்வதற்குள், அங்கிருந்த மலைப்பாம்பு மெல்ல ஊர்ந்து மறைந்தது. அரை
மணி நேரத்துக்கும் மேலாக தேடிய வனத்துறையினர் ஏமாற்றத்துடன்
திரும்பினர்.இந்நிலையில், நேற்று தொழிலாளர்கள் கரும்பு
வெட்டியபோது, மலைப்பாம்பை பார்த்தனர். பின்னர் வந்த
வனத்துறையினர், அங்கு படுத்திருந்த, 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை
லாவகமாக பிடித்து சாக்கு பையில் போட்டு கட்டினர். அதன் பின்,
அந்தியூர் வனப்பகுதியின் அடர்ந்த காட்டில் பாம்பை விட்டனர்.
