/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிடப்பில் வன உரிமை குழு மனுக்கள்! அதிருப்தியில் மலைவாழ் மக்கள்
/
கிடப்பில் வன உரிமை குழு மனுக்கள்! அதிருப்தியில் மலைவாழ் மக்கள்
கிடப்பில் வன உரிமை குழு மனுக்கள்! அதிருப்தியில் மலைவாழ் மக்கள்
கிடப்பில் வன உரிமை குழு மனுக்கள்! அதிருப்தியில் மலைவாழ் மக்கள்
ADDED : மே 20, 2025 11:46 PM
உடுமலை; அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வன உரிமைக்குழுக்கள் சமர்ப்பித்த மனுக்கள் மீது நீண்ட காலமாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், என மலைவாழ் கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 'செட்டில்மென்ட்' எனப்படும், 15க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன.
வனப்பகுதியில், பல தலைமுறைகளாக வசித்து வரும் மலைவாழ் கிராம மக்கள், பல்வேறு அடிப்படை தேவைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். மலைத்தொடரில் உருவாகும் சிற்றாறுகளில் கிடைக்கும் தண்ணீரையே, அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
பல்வேறு காரணங்களால், குடியிருப்புக்கு தேவையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை.
குருமலை, குழிப்பட்டி, கோடந்துார், ஈசல்திட்டு உட்பட பல கிராம மக்கள், குடியிருப்புக்கு தனியாக குடிநீர் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக உள்ளது. பல மலைவாழ் கிராமங்களில், சோலார் பேனல்களும், பழுதடைந்துள்ளது.
அரசால், கட்டி தரப்பட்ட வீடுகளும், பராமரிப்பின்றி, மழை மற்றும் வெயில் காலங்களில், அப்பகுதியினர் வேதனைக்குள்ளாகின்றனர். இதற்கு தீர்வாக, ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் பசுமை வீடு மற்றும் தொகுப்பு வீடு திட்டங்களில், வீடு கட்டி தர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இப்பிரச்னைகளுக்கு, தீர்வாக வன உரிமைக்குழு சார்பில், மலைவாழ் கிராம மக்கள், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர். இம்மனுக்களுக்கும் பல ஆண்டுகளாக தீர்வு காணப்படவில்லை. அடிப்படை வசதிகள் மேம்பாடும் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.