/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீசாக நடித்து பணம் பறிப்பு; முன்னாள் ராணுவ வீரர் கைது
/
போலீசாக நடித்து பணம் பறிப்பு; முன்னாள் ராணுவ வீரர் கைது
போலீசாக நடித்து பணம் பறிப்பு; முன்னாள் ராணுவ வீரர் கைது
போலீசாக நடித்து பணம் பறிப்பு; முன்னாள் ராணுவ வீரர் கைது
ADDED : ஆக 28, 2025 05:47 AM
- நமது நிருபர் -
திருப்பூரில், போலீஸ் என கூறி, மொபைல் போன், பணத்தை பறித்து சென்ற முன்னாள் ராணுவ வீரர் உட்பட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியை சேர்ந்தவர் தமிழரசன், 34. சமையல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே மதுக்கடையில் மது அருந்தி கொண்டிருந்தார்.
அங்கு வந்த, மூன்று பேர் தங்களை இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
தொடர்ந்து, பழைய வழக்கு தொடர்பாக விசாரிப்பதாகவும், தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறி அவரை அழைத்து சென்று, மொபைல் போன், 500 ரூபாயை பறித்துக்கொண்டு, தப்பிச்சென்றனர்.
இது குறித்து, பஸ் ஸ்டாண்டில் உள்ள அவுட் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தமிழரசன் தகவல் அளித்தார்.
தெற்கு போலீசார் மதுக்கடை சுற்று வட்டாரத்தில் தேடிய போது, போலீஸ் என கூறி குற்றச்செயலில் ஈடுபட்ட, மூன்று பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த மன்சூர் அலிகான், 40, திருவண்ணாமலையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மணிவண்ணன், 42, ராமநாதபுரத்தை சேர்ந்த முஜிபூர் ரகுமான், 29 ஆகியோர் தங்களை போலீசார் என கூறி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது.
மூன்று பேரையும் திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

