/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னாள் எம்.எல்.ஏ., மறைவு; அ.தி.மு.க.,வினர் சோகம்
/
முன்னாள் எம்.எல்.ஏ., மறைவு; அ.தி.மு.க.,வினர் சோகம்
முன்னாள் எம்.எல்.ஏ., மறைவு; அ.தி.மு.க.,வினர் சோகம்
முன்னாள் எம்.எல்.ஏ., மறைவு; அ.தி.மு.க.,வினர் சோகம்
ADDED : ஜூன் 11, 2025 06:36 AM
திருப்பூர்; திருப்பூர் தெற்கு தொகுதி குணசேகரன் (அ.தி.மு.க.,) உடல் நலக்குறைவால் காலமானார்.
திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், 58 உடல் நலக்குறைவால் மறைந்தது, அ.தி.மு.க., வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு, கவிதா என்ற மனைவியும், கோகுலப்பிரியா என்ற மகளும், பூமிஷ் என்ற மகனும் உள்ளனர்.
இவர், 2001-06 வரை நகராட்சி கவுன்சிலராகவும், மாநகராட்சியின் துணை மேயராகவும் (2011-16), திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் (2016-2021) பணியாற்றியவர், ஜெ., பேரவையின் மாநில இணை செயலாளர் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, உடல்நலக்குறைவால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு, கட்சியின் முன்னணி நிர்வாகிகளும், பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். அவர் விரும்பியபடி, இரண்டு கண்களும் தானமாக வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை, தெற்கு ரோட்டரி மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. வாலிபாளையம், ராக்கியாபாளையம் பகுதிகளில், துக்க அனுசரிப்புக்காக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.