/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாஜி எம்.எல்.ஏ., மகன், மகளுக்கு அ.தி.மு.க.,வில் பொறுப்பு
/
மாஜி எம்.எல்.ஏ., மகன், மகளுக்கு அ.தி.மு.க.,வில் பொறுப்பு
மாஜி எம்.எல்.ஏ., மகன், மகளுக்கு அ.தி.மு.க.,வில் பொறுப்பு
மாஜி எம்.எல்.ஏ., மகன், மகளுக்கு அ.தி.மு.க.,வில் பொறுப்பு
ADDED : ஆக 11, 2025 11:33 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., வில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் காங்கயம் தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் மணிவண்ணன், மாநில இலக்கிய அணி துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளகோவிலை சேர்ந்த முத்துக்குமார், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரனின் மகன் பூமீஸ், மாநகர் மாவட்ட மருத்துவ அணியின் மாவட்ட இணை செயலாளராகவும், மகள் கோகுலபிரியா, துணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியினர் கூறுகையில், 'அ.தி.மு.க.,வில், மாவட்ட நிர்வாக குழு மற்றும் 14 வகையான சார்பு அணிகள் உள்ளன. அதேபோல், மாநகர பகுதியில் 15 பகுதி அமைப்புகளும் உள்ளன. மாவட்டம் மட்டுமல்லாது, பகுதி அமைப்புகளுக்கும், அனைத்து சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமனம் நடந்துள்ளது. இளைஞர், இளம்பெண்களுக்கு முன்னுரிமை அளித்து பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாக குழு துவங்கி, 'பூத்' கிளை வரை, நிர்வாகிகள் நியமனம் முடிந்துவிட்டது; மாவட்டத்தில் 3,000 பேருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இனி, தேர்தல் பணி வேகமெடுக்கும்,' என்றனர்.

