/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா; பூவோடு எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு
/
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா; பூவோடு எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா; பூவோடு எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா; பூவோடு எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு
ADDED : மே 08, 2025 12:51 AM

குமரலிங்கம்; பிரசித்தி பெற்ற கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை அருகே கொழுமத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. சுயம்பு ஸ்வரூபமாக அம்மன் அருள்பாலித்து வரும் இக்கோவிலில், ஆண்டுதோறும், சுற்றுப்பகுதி கிராம மக்களால், சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு, சித்திரை திருவிழாவில், கடந்த, ஏப்., 22ல் அமராவதி ஆற்றில் திருக்கம்பத்துக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, திருக்கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. சூலத்தேவராக எழுந்தருளியுள்ள திருக்கம்பத்துக்கு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து, வேப்பிலையுடன் கூடிய தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
மே 3ம் தேதி இரவு, 10:00 மணிக்கு கோவில் பூவோடு வைத்தல்; 4ம் தேதி வெங்கல பூவோடு வைத்தல், இரவு அன்னாபிேஷகம், அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் அமராவதி ஆற்றில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பூவோடு வளர்த்தி, கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, இரவு, 8:30 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், சிம்ம வாகனத்தில், அம்மன் புறப்பாடு உற்சவம் நடந்தது.
நேற்று திருவிழா உற்சவ நிகழ்ச்சியும், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு, 10:00 மணிக்கு, புஷ்பரத சுவாமி புறப்பாடும் நடந்தது.
இன்று (8ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. திருவிழாவையொட்டி, கொழுமம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்கள் களைகட்டியுள்ளது.

