/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இசைப்பள்ளியில் மன்றம் துவக்கம்: மாணவர்கள் பங்கேற்பு
/
இசைப்பள்ளியில் மன்றம் துவக்கம்: மாணவர்கள் பங்கேற்பு
இசைப்பள்ளியில் மன்றம் துவக்கம்: மாணவர்கள் பங்கேற்பு
இசைப்பள்ளியில் மன்றம் துவக்கம்: மாணவர்கள் பங்கேற்பு
ADDED : நவ 14, 2025 09:29 PM

உடுமலை: உடுமலை அரசு இசைப்பள்ளியில், மாணவர் மன்ற துவக்க விழா நடந்தது.
தமிழக கலை பண்பாட்டுத்துறையின் கீழ், அரசு இசைப்பள்ளி உடுமலையில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நேற்று மாணவர் மன்ற துவக்க விழா நடந்தது. தனியார் நிறுவன உரிமையாளர் நாகராஜ் தலைமை வகித்தார்.
'சுருதி, ராகம், தாளம், லயம்' என்ற நான்கு குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, முதல் நிகழ்ச்சியாக நான்கு குழுவினரும் சேர்ந்து கலை, இசை நிகழ்ச்சி நடத்தினர்.
நிகழ்ச்சியினை, தலைமையாசிரியர் சரவணமாணிக்கம் ஒருங்கிணைத்து நடத்தினார். குரல் இசை, நாதசுரம், தவில், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.