/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இரு சக்கர வாகனங்கள் மோதல் : கல்லுாரி மாணவி பலி; 4 பேர் காயம்
/
இரு சக்கர வாகனங்கள் மோதல் : கல்லுாரி மாணவி பலி; 4 பேர் காயம்
இரு சக்கர வாகனங்கள் மோதல் : கல்லுாரி மாணவி பலி; 4 பேர் காயம்
இரு சக்கர வாகனங்கள் மோதல் : கல்லுாரி மாணவி பலி; 4 பேர் காயம்
ADDED : நவ 14, 2025 09:29 PM
உடுமலை: பொள்ளாச்சி - பழநி ரோட்டில், பொள்ளாச்சியிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும், தர்னேஷ்,18, உடன் படித்து வந்த ஜீவிதா,18, அவரது சொந்த ஊரான பழநிக்கு, இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு வந்தார்.
அந்தியூர் அருகே வந்த போது, டிராக்டரை முந்த முயற்சித்துள்ளார். அப்போது, லாரியை முந்திக்கொண்டு, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதி, பின்னால் அமர்ந்திருந்த ஜீவிதா கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த டிராக்டர் ஏறி, பலத்த காயமடைந்தார்.
உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்தார். இதில், பைக் ஓட்டி வந்த தர்னேஷ் மற்றும் எதிரே பைக்கில் வந்த பாண்டீஸ்வரன், 19, பின்னால் அமர்ந்து வந்த விக்னேஷ், 20, நஜீப், 19 ஆகியோர் பலத்த காயங்களுடன், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.