/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய பணிகளுக்கு அடிக்கல்; பயனாளிகளுக்கு நல உதவி
/
புதிய பணிகளுக்கு அடிக்கல்; பயனாளிகளுக்கு நல உதவி
ADDED : டிச 20, 2024 04:11 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், நேற்று பல்வேறு புதிய திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி துவக்கிவைத்தார்.
திருப்பூர் மாநகராட்சியில் 11 பணிகள்; பேரூராட்சிகளில் மூன்று பணிகள்; ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 14 பணிகள்; பொதுப்பணித்துறையில் 2 பணிகள்; சுகாதாரத்துறையில் 6 பணிகள்; உயர்கல்வித்துறையில் 1; கால்நடைத்துறையில் 1 என, மொத்தம் 51.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவடைந்த 38 திட்ட பணிகளை துணை முதல்வர் திறந்துவைத்தார்; 250.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 19 புதிய பணிகளுக்கு அடிக்கல்நாட்டி துவக்கிவைத்தார்.
வருவாய்த்துறை சார்பில் 100 பயனாளிகளுக்கு 47.46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; மகளிர் திட்டம் சார்பில் 150 பயனாளிகளுக்கு, 8.07 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு 66,900 ரூபாய்; பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 10 பயனாளிகளுக்கு 45,306 ரூபாய்; தாட்கோ சார்பில், 20 பயனாளிகளுக்கு 53.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.