/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் நிறுவனர் மற்றும் விளையாட்டு தினம்
/
வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் நிறுவனர் மற்றும் விளையாட்டு தினம்
வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் நிறுவனர் மற்றும் விளையாட்டு தினம்
வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் நிறுவனர் மற்றும் விளையாட்டு தினம்
ADDED : ஆக 31, 2025 04:02 AM

திருப்பூர் : அவிநாசி அடுத்த சேவூர், அ.குரும்பபாளையத்தில் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனம் உள்ளது. இதன் நிறுவனர் சேகர் பிறந்த நாளான ஆக., 29 அன்று ஆண்டுதோறும் நிறுவனர் மற்றும் விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் மாணவர் பிரகாஷ் விளையாட்டு விழாவை துவக்கிவைத்து பரிசுகள் வழங்கினார். தாளாளர் ஜெயந்தி தலைமை வகித்தார். அறங்காவலர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார்.
நிறுவனர் தின நிகழ்ச்சியில், மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் ராஜேஷ்குமார் வரவேற்றார். நிறுவனர் சேகர் படத்துக்கு சிறப்பு விருந்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிறுவனர் தின உரையை முதல்வர் சிவராஜ் நிகழ்த்தினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுதா நன்றி கூறினார்.
விளையாட்டு விழாவில் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.