/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் மாவட்ட தி.மு.க.,வில் நான்கு மா.செ.,க்கள் நியமனம்
/
திருப்பூர் மாவட்ட தி.மு.க.,வில் நான்கு மா.செ.,க்கள் நியமனம்
திருப்பூர் மாவட்ட தி.மு.க.,வில் நான்கு மா.செ.,க்கள் நியமனம்
திருப்பூர் மாவட்ட தி.மு.க.,வில் நான்கு மா.செ.,க்கள் நியமனம்
ADDED : பிப் 14, 2025 04:09 AM
திருப்பூர்; தி.மு.க., கட்சி அமைப்பில் மாவட்ட செயலாளர்கள் மட்டத்தில் சில மாற்றங்களை கட்சி தலைமை நேற்று அறிவித்தது. அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் இது வரை இரண்டு மாவட்ட செயலாளர்கள் இருந்தது தற்போது நான்கு மாவட்ட செயலாளர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில், காங்கயம் மற்றும் தாராபுரம் தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் மேற்கு மாவட்டத்துக்கு அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகள் அடங்கிய திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக எம்.எல்.ஏ., செல்வராஜ், அவிநாசி மற்றும் திருப்பூர் வடக்கு தொகுதிகள் அடங்கிய வடக்கு மாவட்ட செயலாளராக மேயர் தினேஷ்குமார், உடுமலை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகள் அடங்கிய தெற்கு மாவட்ட செயலாளராக மாநகராட்சி மண்டல குழு தலைவர் பத்மநாபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க., வில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் கட்டுப்பாட்டின் கீழ் அவிநாசி, பல்லடம், திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு ஆகிய நான்கு தொகுதிகள்; தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் கட்டுப்பாட்டில் உடுமலை, மடத்துக்குளம், காங்கயம் மற்றும் தாராபுரம் ஆகிய நான்கு தொகுதிகள் இருந்தன. தற்போது, இந்த இரு மாவட்ட செயலாளர்களிடமிருந்தும் தலா இரு தொகுதிகள் அடங்கிய புதிய கட்சி மாவட்டம் அமைக்கப்பட்டு, அமைச்சர் சாமிநாதன் மற்றும் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் புதிய மாவட்ட செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

