/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டணமில்லா பஸ் பயணம்; நடத்துனருக்கு வழிகாட்டுதல்
/
கட்டணமில்லா பஸ் பயணம்; நடத்துனருக்கு வழிகாட்டுதல்
ADDED : ஜன 04, 2025 12:13 AM
திருப்பூர்; போலீசாருக்கு கட்டணமில்லா பஸ் பயணத்தின் போது நடத்துனர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் இருந்து பாளையங்கோட்டைக்கு அரசு பஸ்சில் பயணித்த ஆயுதப்படை போலீசார் - நடத்துனர் இடையே பஸ் டிக்கெட் எடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், போலீசாருக்கு பஸ்பாஸ் வழங்கும் பணிகளை போக்குவரத்து கழகம் வேகப்படுத்தி வருகிறது.
அதன்படி,'பஸ்களில் பயணிக்கும் போலீசாருக்கு இலவச பஸ் பாஸ் (பயண அட்டை) வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில், கட்டணமில்லா பஸ் பயணத்துக்கு அனுமதிக்க வேண்டும். இந்த பஸ்பாஸ் குறிப்பிட்ட மாவட்டத்துக்குள்ளாகவும், கால அளவுக்கும் மட்டுமே செல்லுபடியாகும்.
அட்டையை காண்பிக்க தவறினால் அபராதம் வசூலிக்கலாம். பஸ்பாஸ் தவறாக பயன்படுத்தினால் பறிமுதல் செய்து, நடவடிக்கை மேற்கொள்ளலாம், என, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளது.
'அரசு பஸ்சில் பயணிக்கும் போலீசாருக்கான வழிகாட்டுதல் குறித்து நடத்துனர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட இருக்கிறது.
இது குறித்து விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும்,' என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.