/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம்; திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி அமைக்கிறது
/
இலவச புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம்; திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி அமைக்கிறது
இலவச புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம்; திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி அமைக்கிறது
இலவச புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம்; திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி அமைக்கிறது
ADDED : ஜூலை 07, 2025 12:26 AM

திருப்பூர்; திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் துவங்கி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து, ஒன்பதாவது ஆண்டு துவங்குகிறது. ஒன்பதாவது தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.
காந்தி நகர் ஏ.வி.பி., பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவுக்கு தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் ரோட்டரி கவர்னர்கள் டாக்டர் முருகநாதன், சிவராஜ், இளங்குமரன், ரோட்டரி கவர்னர் தனசேகர் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர்.
புதிய தலைவராக அருள்செல்வம்; செயலாளர்களாக டாக்டர் பொம்முசாமி, ேஹமந்த் குமார் ஜெயின், பொருளாளராக செல்வம் ஆகியோர் பதவியேற்றனர். திட்ட குழு நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.
புதிய நிர்வாகிகளை சிறப்பு விருந்தினர்கள், மேயர் தினேஷ்குமார், பாடலாசிரியர் பா.விஜய் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். ரோட்டரி கிளப் நிர்வாகிகள் சிவபிரகாஷ், லோகநாதன், ஆனந்தஜோதி, கணேசமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.
செயல்திட்டங்கள்
திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் நடப்பாண்டு செயல்திட்டங்களாக சில முக்கியமான சேவைகளை அறிவித்துள்ளது.
அதன்படி 70 லட்சம் ரூபாய் மதிப்பில், இலவச டயாலிசிஸ் மையம் அமைக்கப்படும். இதற்காக ஏழைகளை மையத்துக்கு அழைத்து வந்து திரும்ப வீட்டுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 60 லட்சம் ரூபாய் மதிப்பில் நடமாடும் நுரையீரல் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும். மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் குடிநீர் தொட்டி வழங்கப்படும்.
புற்றுநோய் மற்றும் நீண்ட நாள் நோய்களால் அவதிப்படுவோரின் இறுதி நாட்களில் சிரமமின்றி வாழும் வகையில், 10 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு மையம் அமைத்து செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவையில் செயல்படும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் வழங்கப்படும்.