நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள சாந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இலவச பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இலவசமாக பல் பரிசோதனை செய்யப்பட்டது.
டாக்டர்கள் தீபிகா மற்றும் விஷால் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு பல் பரிசோதனை செய்தனர். முகாமில் சிறப்பாக பற்களை பராமரித்ததற்காக மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
திருமுருகன் பூண்டி ரோட்டரி கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பி.எஸ்.ஜி. கலை கல்லுாரி ரோட்ராக்ட் நிர்வாகிகள் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் ரேணுகாதேவி மோகன்குமார் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

