/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச வேட்டி - சேலைகால அவகாசம் நீட்டிப்பு
/
இலவச வேட்டி - சேலைகால அவகாசம் நீட்டிப்பு
ADDED : பிப் 04, 2025 01:08 AM
திருப்பூர்; பொங்கல் பண்டிகையின் போது, ரேஷன் கார்டுக்கு இலவசமாக வேட்டி - சேலை வழங்கப்படுகிறது. நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியன வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டுகளில், பல்வேறு பொருட்களும், பணமும் வழங்கப்பட்டது. கார்டுதாரர்கள் ஆர்வத்துடன் பெற்றுச் சென்றனர். ஆனால், நடப்பாண்டு பணம் வழங்காததால், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க பலரும் ஆர்வம் காட்டவில்லை.
இருப்பினும், பரிசு தொகுப்பு வாங்க, கடந்த ஜன., 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதுபோல, இலவச வேட்டி - சேலையும், 31ம் தேதிக்குள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான இலவச வேட்டி - சேலை முழுமையாக வராத காரணத்தால், பலரும் வாங்கவில்லை. இருப்பில் உள்ள வேட்டி - சேலைகளை என்ன செய்வது என்ற குழப்பம், விற்பனையாளர்களிடம் ஏற்பட்டது.
இந்நிலையில், இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை மீட்பு துறை கமிஷனர் ராஜேஷ் லக்கானி, கூட்டுறவு துறை பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தில், இலவச வேட்டி - சேலைகளை வழங்க, கால அவகாசம் இம்மாதம், 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.