/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்க்கரை நோய் பரிசோதனை வரும் 23ல் இலவச முகாம்
/
சர்க்கரை நோய் பரிசோதனை வரும் 23ல் இலவச முகாம்
ADDED : நவ 21, 2025 06:35 AM
திருப்பூர்: திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில், வரும், 23ம் தேதி திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள ஹார்வி குமாரசாமி திருமண மண்டப வளாகத்தில், உள்ள திருவருள் அரங்கத்தில், இலவச சிறப்பு சர்க்கரை நோய் பரிசோதனை, மருத்துவர் ஆலோசனை மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
முகாமை, கோவை மதுரம் சர்க்கரை நோய் மற்றும் தைராய்டு மருத்துவ மையம் வழிநடத்துகிறது. முதலில் வரும், 200 பயனாளிகளுக்கு இலவசமாக சர்க்கரை நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. தேவைப்படுவோருக்கு கூடுதல் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும்.
'எப்படி வாழ்ந்தால் சர்க்கரை நோய் இல்லாமலும், கட்டுப்பாடுடனும் நலமாக வாழ முடியும்' என டாக்டர் கிருஷ்ணன் சாமிநாதன் ஆலோசனை வழங்க உள்ளார். மேலும், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்படும்.
விபரங்களுக்கு, 93426 93291 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்க நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பிரிவு சேர்மன் டாக்டர் சக்திவேல் தெரிவித்தார்.

