/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 21, 2025 06:35 AM

திருப்பூர்: தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கங்கள் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செல்வகுமார், தாமோதரன் தலைமை வகித்தனர்.
தமிழக அரசின் வேளாண் உழவர் நலத்துறையால், தோட்டக்கலைத்துறையில் கொண்டுவரப்பட்டுள்ள 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' (யு.ஏ.டி.டி., - 2.0), தானிய மற்றும் மானாவாரி பயிர் சாகுபடியை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வாயிலாக, தோட்டக்கலை தொழில்நுட்பங்களை, விவசாயிகளுக்கு வழங்க மற்ற துறை அலுவலர்களை இணைத்தால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவர்.
தோட்டக்கலை பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களை படித்த, தோட்டக்கலை அலுவலர்களால் மட்டுமே, விவசாயிகளிடம், தொழில்நுட்பங்களை சரியாக கொண்டு சேர்க்கமுடியும். எனவே, தமிழக அரசு யு.ஏ.டி.டி., - 2.0 திட்டத்தை கைவிட வேண்டும்' என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

