ADDED : அக் 21, 2024 03:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் லயன்ஸ் கிளப், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், 770வது இலவச கண் சிகிச்சை முகாம், குமரன் ரோடு, லயன்ஸ் கிளப் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
ஆர்.கே., டெக்ஸ் உரிமையாளர் ரகுநாதன் துவக்கி வைத்தார். லயன்ஸ் கிளப் தலைவர் வெள்ளியங்கிரி, செயலாளர் பரமசிவம் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 166 பேர் பங்கேற்றதில், உயர்சிகிச்சைக்கு, 46 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். அடுத்த முகாம் நவ., 17ல் நடைபெறும்.