/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச காஸ் சர்வீஸ் சிறப்பு முகாம்
/
இலவச காஸ் சர்வீஸ் சிறப்பு முகாம்
ADDED : அக் 17, 2025 11:15 PM
உடுமலை: -உடுமலை பாரத் காஸ் விநியோகஸ்தரான செல்வி காஸ் ஏஜென்சீஸ் சார்பில், அலுவலக வளாகத்தில் இலவச காஸ் சர்வீஸ் முகாம் நடைபெற்றது.
காஸ் நுகர்வோர், தங்கள் அடுப்புகளை சர்வீஸ் செய்து கொள்வதால் எரிவாயு சேமிப்பு, பாதுகாப்பு, எரிவாயு கசிவு மற்றும் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
இதனால், பாரத் காஸ் சார்பில், இலவச காஸ் அடுப்பு சர்வீஸ் செய்யும் பணி நடந்து வருகிறது.
இம்முகாமில், காஸ் அடுப்பின் உதிரிபாகங்கள், 15 சதவீத தள்ளுபடியில் வழங்கப்பட்டது. பயன்படுத்த முடியாத பழைய அடுப்புகளுக்கு, ரூ.400 முதல் ரூ. 600 வரைதள்ளுபடி வழங்கப்பட்டது. மேலும், புதிய எரிவாயு இணைப்பு பெற விரும்புபவர்களுக்கு, ரூ 200 வரை சலுகை வழங்கப்படுவதாகவும், மாற்று சிலிண்டர் பெற இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
ஐந்து கிலோ சிலிண்டர் உடனடியாக வழங்கப்படுகிறது. வரும் 21ம் தேதி வரை நடக்கும் இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, ஏஜன்சி நிர்வாகி அய்யப்பன் தெரிவித்தார்.