/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளி மாணவர் இலவச மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளி மாணவர் இலவச மருத்துவ முகாம்
ADDED : ஜன 27, 2025 12:07 AM
அவிநாசி; திருப்பூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் அவிநாசி வட்டார வள மையம் நடத்தும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் அம்மாபாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாவட்ட உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை, சுகாதார இணை இயக்குனர் (பொறுப்பு) சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி, கரோலின் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார கல்வி அலுவலர்கள் மகேஸ்வரி, சுமதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேஷ், அம்மாபாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் பாலாஜி, பத்மநாபன், மகேஷ் மாரிமுத்து, முருகன் ஆகியோர் மருத்துவ ஆலோசனை வழங்கினர். மாற்றுத்திறனாளி நல வாரிய அலுவலர் வசந்தகுமார் அடையாள அட்டை வழங்கினார். உதவி உபகரணங்கள் தேவைப்படுபவருக்கு அளவீடுகள் செய்யப்பட்டது. மொத்தம் 73 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
32 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.