/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச மருத்துவ முகாம் பூலாங்கிணறில் நடந்தது
/
இலவச மருத்துவ முகாம் பூலாங்கிணறில் நடந்தது
ADDED : பிப் 17, 2026 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: பூலாங்கிணறு ஊராட்சி அலுவலகத்தில், பெண்களுக்கான இலவச கர்ப்பப்பை, வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நடந்தது.
எரிசனம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தகுமார், செல்லப்பம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜனனி முன்னிலையில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினர் இணைந்து இம்முகாமை நடத்தினர்.
முகாமில், சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.

