sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நொய்யல் நதியை ஆதரமாக்கி நீர் செறிவூட்டும் திட்டம்

/

நொய்யல் நதியை ஆதரமாக்கி நீர் செறிவூட்டும் திட்டம்

நொய்யல் நதியை ஆதரமாக்கி நீர் செறிவூட்டும் திட்டம்

நொய்யல் நதியை ஆதரமாக்கி நீர் செறிவூட்டும் திட்டம்

1


UPDATED : பிப் 18, 2026 06:59 AM

ADDED : பிப் 18, 2026 05:12 AM

Google News

UPDATED : பிப் 18, 2026 06:59 AM ADDED : பிப் 18, 2026 05:12 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: நொய்யல் ஆற்றுப்படுகையில் உள்ள கிணற்றில் இருந்து, நீரேற்ற முறையில், காங்கயம் வட்டாரம் பாலசமுத்திரம் புதுார், கத்தாங்கண்ணி மற்றும் கணபதிபாளையம் ஊராட்சிகளின் நீர்தேவையை பூர்த்தி செய்ய நிறைவேற்றப்படும் திட்டம், எந்தளவு சாத்தியமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கயம் வட்டாரம், பாலசமுத்திரம்புதுார், கத்தாங்கண்ணி மற்றும் கணபதிபாளையம் ஊராட்சிகளில் உள்ளற முனியப்பன் கோவில், தமலான்தோட்ட குட்டை, சிவகிரி முனியப்பன் கோவில், கோடாங்கி காடு, பார்வதிக்காடு மற்றும் வெள்ளியங்காடு தடுப்பணைகள், அய்யன்னாரப்பன் குட்டை, ஜல்லிமேடு புதிய தடுப்பணை, மனக்காட்டு குட்டை மற்றும் தடுப்பணை, வாரனாசிக்காட்டு குட்டை உள்ளிட்ட, 20 குளம், குட்டை மற்றும் தடுப்பணைகள் உள்ளன.

நீர்மட்டம் சரிவு

இருப்பினும், இக்கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், வறட்சி தலைதுாக்கி, விவசாயம் பாதிக்கப்பட்டு, வருகிறது. எனவே, நீண்ட கால மற்றும் நிலையான நீர் மேம்பாடு திட்டமாக, நொய்யல் ஆற்றில் உள்ள குளத்தில் இருந்து, நீர் செறிவூட்டல் அடிப்படையில், குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பி, அதன் வாயிலாக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, 5.24 கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

செயல்படும் விதம்

அதன்படி, நொய்யல் ஆற்றில் இடது கரையில் ஏற்கனவே இருக்கும் கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் நீர் உந்தப்பட்டு, 20க்கும் மேற்பட்ட குளம், குட்டை, தடுப்பணைகளுக்கு செலுத்தி, அவற்றை நிரப்புவதே திட்டம். இவற்றை நிரப்புவதற்கு, 3.94 மில்லியன் கன அடி நீர் தேவைப்படுகிறது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக, திருப்பூர் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியின் கீழ், 5.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.

திட்டப்பணிகளை பார்வையிட்ட அமைச்சர் சாமிநாதன், ''இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்த கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்; குளங்கள் மற்றும் தடுப்பணைகளை சுற்றியுள்ள வறண்ட நிலங்களில் விவசாயம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியும். இதனால், விவசாய திறன் மேம்படும்'' என நம்பிக்கை ஏற்படுத்தினார்.

எப்படி சாத்தியம்?

திருப்பூரை மையப்படுத்தி ஓடும் நொய்யல் ஆற்றில் மழைநீரும், தொழிற்சாலைகளின் சாயக்கழிவுநீர், குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்த வெளியேறும் சாயக்கழிவு நீரும் தான் ஓடுகிறது. நீர் மிகவும் மாசுபட்டிருப்பதால், கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்கள் கூட உருவாகிறது என, மருத்துவ ஆய்வறிக்கை கூட தெரிவித்திருக்கிறது.இந்நிலையில் நீரில் கலந்துள்ள டி.டி.எஸ்., அளவு, 700 என்ற அளவில் இருக்கும் போது மட்டும் தான் அந்த நீர், குளம், குட்டைகளை நிரப்ப பம்ப் செய்யப்படும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தளவு சுத்தமான நீர் நொய்யலில் செல்ல வேண்டுமானால், நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டி தீர்க்க வேண்டும்; நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட வேண்டும்; அவ்வாறு ஓடும் நீரில் ஆற்றில் கலந்துள்ள கழிவுகள் அடித்து செல்லப்பட்டு, பின் ஓரளவு சுத்தமான நீர் ஓடும் போது தான், 700 டி.டி.எஸ். என்ற நிலையை அந்த தண்ணீர் அடையும்.

முதலில் நொய்யலை மீட்கணும்! நொய்யல் ஆற்று நீரை சுத்திகரிப்பு செய்யாமல் பயன்படுத்தும் சாத்தியமில்லை என, நொய்யல் தொடர்பான ஒரு வழக்கில் கோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது.நொய்யல் நதி என்பது, அழிந்து போன பகுதியாகவே மாறிவிட்டது. தென்மேற்கு மற்றும் பருவமழை நன்கு பெய்து நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனால், கடந்தாண்டு தென் மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்தும் கூட, வட கிழக்குப்பருவ மழை பொய்த்தது. இதுபோன்ற சூழலில் இத்திட்டம் எப்படி சாத்தியமாகும் என்பதே கேள்வி. முதலில், நொய்யல் நதியை மீட்டெடுத்து, நன்னீர் வழிந்தோடும் நதியாக மாற்ற வேண்டும்; அப்போதுதான் இதுபோன்ற திட்டங்கள் வெற்றியடையும். - காளிமுத்து தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர்








      Dinamalar
      Follow us