/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீராமச்சந்திரா மிஷன் சார்பில் இலவச மருத்துவ மையம்
/
ஸ்ரீராமச்சந்திரா மிஷன் சார்பில் இலவச மருத்துவ மையம்
ஸ்ரீராமச்சந்திரா மிஷன் சார்பில் இலவச மருத்துவ மையம்
ஸ்ரீராமச்சந்திரா மிஷன் சார்பில் இலவச மருத்துவ மையம்
ADDED : ஏப் 14, 2025 05:28 AM
திருப்பூர் : திருப்பூர் அடுத்த பல்லவராயன்பாளையம், ஸ்ரீ ராமச்சந்திரா மிஷன் வைரவிழா பூங்கா வளாகத்தில், இலவச மருத்துவ ஆலோசனை மையம் துவக்க விழா நேற்று நடந்தது.
காவிலிபாளையம், ஸ்மார்ட் நிட்வேர் உரிமையாளர் ரஞ்சித்பக்சந்தானி மருத்துவ மையத்தை திறந்து வைத்தார். பல்லடம், வனம் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் சுந்தரராஜன் மருந்தகத்தை திறந்து வைத்தார். திருப்பூர் மைய ஒருங்கிணைப்பாளர் குப்தா வரவேற்றார். டாக்டர் கார்த்திகேயன் நன்றி கூறினார். விழா ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 'புதிய மருத்துவ மையம், வாரத்தில் ஏழு நாட்களும் காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை செயல்படும்.
மருத்துவர் குழு வாயிலாக மருத்துவ ஆலோசனை, சிகிச்சை, மருந்து, மாத்திரை இவை அனைத்தும் எவ்வித கட்டணமும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். முதன்முறையாக வருவோர், 50 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்,' என்றனர்.

