/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அகர்பத்தி தயாரிக்க இலவச பயிற்சி முகாம்
/
அகர்பத்தி தயாரிக்க இலவச பயிற்சி முகாம்
ADDED : செப் 22, 2024 04:25 AM
திருப்பூர் : திருப்பூர் - அனுப்பர்பாளையம் புதுாரில் உள்ள கனரா வங்கியில் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், அகர்பத்தி தயாரிப்பு இலவச பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது.
எழுத படிக்க தெரிந்த, 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இயற்கை முறையில் சோப்பு, ஷாம்பு, தலைவலி மருந்து, சோப் ஆயில் தயாரிப்பு பினாயில், அகர்பத்தி, சாம்பிராணி, மெழுகுவர்த்தி தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி நாட்களில் காலை மற்றும் மாலை தேநீர், மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிப்போருக்கு, மத்திய அரசு சான்றிதழ் மற்றும் கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 94890 43923, 99525 18441,86105 33436 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.