/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காளான் வளர்ப்புக்கு இலவச பயிற்சி
/
காளான் வளர்ப்புக்கு இலவச பயிற்சி
ADDED : ஆக 24, 2025 11:41 PM
உடுமலை; மத்திய அரசு மற்றும் கனரா வங்கி சான்றிதழுடன் கூடிய காளான் வளர்த்தல் மற்றும் அதன் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல் இலவச பயிற்சி இன்று துவங்குகிறது.
திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், 'காளான் வளர்த்தல் மற்றும் அதன் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல் குறித்த 10 நாள் முழு நேரப்பயிற்சி இன்று துவங்குகிறது.
எழுத படிக்க தெரிந்த, 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது.
காலை-, மாலை தேநீர் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும்.
பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் ,335/பி1, வஞ்சியம்மன் கோவில் எதிரில், முதலிப்பாளையம் பிரிவு, காங்கேயம் சாலை, திருப்பூர்,- 641606 என்ற முகவரிக்கு நேரில் செல்ல வேண்டும்.
முதலில் செல்வோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு 9442413923, 99525 18441, 90804 42586, 86105 33436 ஆகிய மொபைல் போன் எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.