/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளாஸ்டிக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை முடக்கம்; பள்ளிகளில் பயன்பாடு அதிகரிப்பு
/
பிளாஸ்டிக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை முடக்கம்; பள்ளிகளில் பயன்பாடு அதிகரிப்பு
பிளாஸ்டிக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை முடக்கம்; பள்ளிகளில் பயன்பாடு அதிகரிப்பு
பிளாஸ்டிக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை முடக்கம்; பள்ளிகளில் பயன்பாடு அதிகரிப்பு
ADDED : செப் 23, 2024 10:39 PM
உடுமலை : பள்ளிகளில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், மீண்டும் முடங்கி வருகிறது.
மாநிலம் முழுதுவம் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த, பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும், குறிப்பிட்ட மைக்ரான் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது.
பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தீவிரப்படுத்த, முதற்கட்டமாக, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பள்ளிகளில் இணை செயல்பாடுகளில் பயன்படுத்தும், பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
தற்போது, பெரும்பான்மையான பள்ளிகளில் மீண்டும் பழைய நிலைதான் தொடர்கிறது. குழந்தைகளிடமும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு தீவிரமாக இல்லை.
சில பள்ளிகளில் மட்டுமே, பிளாஸ்டிக் தவிர்ப்பது கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. பல பள்ளிகளில் இன்னும் அதற்கான முக்கியத்துவம் அளிக்கப்படாமல் உள்ளது.
மரக்கன்றுகள் நடுவது பள்ளிகளில் தீவிரமடைந்து வருகிறது. அதேபோல் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது குறித்தும், தொடர்ச்சியான விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாயிலாக, பள்ளிகளில் பிளாஸ்டிக் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் கல்வித்துறையினர், அந்தந்த வட்டார அலுவலர்கள் வாயிலாக, தீவிரமாக ஆய்வு நடத்துவதோடு, அறிக்கை அனுப்பியும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் முயற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்தினர் கூறியதாவது:
பள்ளிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருளாக, பெரும்பான்மையான குழந்தைகள் தவிர்க்க முடியாமல் கொண்டு வருவது தண்ணீர் பாட்டில்கள் தான்.
பொருளாதார வசதியில்லாத குழந்தைகள், சில்வர் பாட்டில்கள் பெறுவது பலருக்கும் சாத்தியமில்லாமல் உள்ளது. தன்னார்வலர்கள் வாயிலாக, மாணவர்களுக்கு பிளாஸ்டிக் இல்லாத தண்ணீர் பாட்டில்கள் பெற்று தருவதற்கு, பள்ளிகள் முன்வரலாம்.
அடுத்து, குழந்தைகள் கொண்டும் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கபட்ட திண்பண்டங்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.