/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆரா பிராபர்ட்டீஸ் நிறுவன பிரெஞ்ச் ஸ்டைல் வில்லாக்கள்
/
ஆரா பிராபர்ட்டீஸ் நிறுவன பிரெஞ்ச் ஸ்டைல் வில்லாக்கள்
ஆரா பிராபர்ட்டீஸ் நிறுவன பிரெஞ்ச் ஸ்டைல் வில்லாக்கள்
ஆரா பிராபர்ட்டீஸ் நிறுவன பிரெஞ்ச் ஸ்டைல் வில்லாக்கள்
ADDED : ஆக 16, 2025 09:50 PM

திருப்பூர்; ஆரா பிராபர்ட்டீஸ் நிறுவனம் திருப்பூரில் முதல் முறையாக பிரெஞ்ச் ஸ்டைலில் ஆடம்பர வில்லாக்கள் அடங்கிய புதிய கேட்டட் கம்யூனிட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆரா பிராபர்ட்டீஸ் நிர்வாகிகள் கூறியதாவது:
திருப்பூர் நகரின் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் துறையில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது. திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளி அருகே, எங்கள் நிறுவனம் சார்பில் பிரீமியம் ஆடம்பர பிரெஞ்ச் வடிவ வில்லாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வில்லாக்கள், மொத்தம், 3.5 ஏக்கர் பரப்பில், 32 வில்லாக்களாக அமைந்துள்ளது. நகரின் அமைதியான சூழலில் இவை உள்ளன. மூன்று பெட்ரூம் உடன் 5.85 சென்ட் பரப்பில் இந்த பிரீமியம் வில்லாக்கள் 1.35 கோடி ரூபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரீமியம் கேட்டட் கம்யூனிடியில், இணையும் வாடிக்கையாளர்களுக்கு, 2,500 சதுர அடி கிளப் ஹவுஸ், நிகழ்ச்சிகளுக்கான 3,100 சதுர அடி அவுட்டோர் ஸ்பேஸ், நவீன ஜிம், சிறுவர் விளையாட்டு பகுதி, பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ், ஓய்வறை ஆகிய வசதிகள் உள்ளன.
விசாலமான தார் ரோடு, பசுமையான மரங்கள், பாதுகாப்புக்காக சுற்றுச் சுவர், வாஸ்து முறையில் மனை அமைப்பு என அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட டிசைன் வசதி; விருப்பத்துக்கேற்ப இண்டீரியர் டிசைன்கள் வழங்கும் வசதியும் உள்ளது.
நகரின் அமைதியான சூழலில், பிரெஞ்ச் ஆடம்பரத்தைப் பிரதிபலிக்கும் புதிய வாழ்க்கை முறை திருப்பூர் மக்களுக்கு முதன் முதலாக இதன் மூலம் அறிமுகப்படுத்துகிறோம்.
மேலும் விவரங்களுக்கு, 99521 86378 மற்றும் 96294 00059 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.