/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இனி, ரவுடிகளுக்கு கெட்ட நாள்: கடுமையான நடவடிக்கை உண்டு :களமிறங்க தயாராகும் புதிய எஸ்.பி.,
/
இனி, ரவுடிகளுக்கு கெட்ட நாள்: கடுமையான நடவடிக்கை உண்டு :களமிறங்க தயாராகும் புதிய எஸ்.பி.,
இனி, ரவுடிகளுக்கு கெட்ட நாள்: கடுமையான நடவடிக்கை உண்டு :களமிறங்க தயாராகும் புதிய எஸ்.பி.,
இனி, ரவுடிகளுக்கு கெட்ட நாள்: கடுமையான நடவடிக்கை உண்டு :களமிறங்க தயாராகும் புதிய எஸ்.பி.,
ADDED : ஜன 02, 2025 11:24 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும், குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, திருப்பூர் புதிய எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் எஸ்.பி.,யாக இருந்த அபிஷேக் குப்தா, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், திருப்பூர் மாநகர தெற்கு துணை கமிஷனராக இருந்த யாதவ் கிரிஷ் அசோக், எஸ்.பி., யாக நியமிக்கப்பட்டார். இவர் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., யாக நேற்று பொறுப்பேற்று கொண்டார். பொறியியல் (பி.டெக்.,) பட்டதாரியான இவர் 2019ல் ஐ.பி.எஸ்., பணிக்கு தேர்வானவர்.
முதலில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் ஏ.எஸ்.பி.,யாக பணியாற்றினார். அடுத்து, பதவி உயர்வு பெற்று, திருப்பூர் துணை கமிஷனராக இருந்து, தற்போது திருப்பூர் எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுள்ளார். தொடர்ந்து, மாவட்டத்தில் பல்வேறு விஷயங்களில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.பி., கூறியதாவது:
பல்லடம் அருகே, சேமலைக்கவுண்டம்பாளையத்தில், மூன்று பேர் ஆதாய கொலை வழக்கில் தனிப்படையின் புலன் விசாரணை நேரடியாக கண்காணிக்கப்படும். மக்களின் வாழ்க்கைக்கும், உடமைக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். போதை பொருள் குற்றத்துக்கு, குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளின் நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும். குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை. மாவட்டத்தில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் கண்காணிக்கப்படுவார்கள். சாலை விபத்துகளில் உயிரிழப்பை குறைக்க தேவையான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

