/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரன்ட்லைன் மிலேனியம் மாணவர்கள் அபார சாதனை
/
பிரன்ட்லைன் மிலேனியம் மாணவர்கள் அபார சாதனை
ADDED : மே 17, 2025 01:15 AM

திருப்பூர் : திருப்பூர் பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியில் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில், 500க்கு 492 மதிப்பெண்களுடன் அக் ஷித் முதலிடம், 486 மதிப்பெண்களுடன் அஸ்வின் இரண்டாமிடம்; 484 மதிப்பெண்ணுடன் மிதுன்விஷால் மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவர்களில், 29 பேர், 450 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 50 பேர், 400 க்கு அதிகமாகவும் மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழில் 4 பேர் சென்டம் அடித்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வில், பிரதீபா, 500க்கு 479 மதிப்பெண்களும், வினோதன் 467, யஸ்வந்த் 465 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு முதல், பொதுத்தேர்வில் இப்பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுவருகிறது.
தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி, முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.
இப்பள்ளியில் தற்போது பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நீட், ஜெ.இ.இ., தேர்வுக்கான இலவசபயிற்சி அளிக்கப்படுகிறது.