/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரன்ட்லைன் பள்ளி ஸ்கேட்டிங்கில் அபாரம்
/
பிரன்ட்லைன் பள்ளி ஸ்கேட்டிங்கில் அபாரம்
ADDED : ஜூலை 22, 2025 12:16 AM

திருப்பூர்; கோவை சகோதயா சார்பில், திருப்பூர் ஸ்பிரிங் மவுன்ட் பள்ளியில், ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றன.
திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த, 80 பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர். திருப்பூர் சகோதயா சார்பில் நடைபெற்ற போட்டியில், 43 பள்ளிகளைச் சேர்ந்த, 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், ஸ்பிரிங் மவுன்ட் பள்ளி, 10ம் வகுப்பு மாணவர் பிரணவ், 200, 300 மீட்டர் மற்றும் குவாட் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.
மேலும், 14 வயதுக்குட்பட்டோருக்கான, 100 மீ., குவாட் போட்டியில், 7ம் வகுப்பு மாணவர் சச்சின், இரண்டாம் பரிசு பெற்றார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, அதற்கு துணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் ஜோதி பாஸ்கர் ஆகியோரை, பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், துணை செயலர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா மற்றும் தலைமையாசிரியை கமலாம்பாள் ஆகியோர் பாராட்டினர்.