/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முழு நேர ரேஷன் கடை பகுதி நேரமே செயல்பாடு
/
முழு நேர ரேஷன் கடை பகுதி நேரமே செயல்பாடு
ADDED : ஜன 23, 2025 11:49 PM

பல்லடம்; பல்லடம் அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகரில் உள்ள இரண்டாம் எண் ரேஷன் கடையில், 840 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
முழு நேரமாக செயல்பட வேண்டிய இந்த ரேஷன் கடை, பகுதி நேரமாக செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. வாரந்தோறும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.  வெளிமாநில தொழிலாளர்களும் அதிகப்படியாக இங்கு ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கடை திறக்கப்படுவதால், ரேஷன் பொருட்கள் சரி வர கிடைப்பதில்லை. மேலும், கூலி மற்றும் பனியன் வேலைக்கு சென்று வரும் நாங்கள், விடுப்பு எடுத்து ரேஷன் கடைக்கு செல்ல வேண்டி உள்ளது.
இந்த ரேஷன் கடை முழு நேரமாக செயல்பட உத்தரவு இருந்தும், பகுதி நேரமாக மட்டுமே செயல்படுவது ஏன் என்று தெரியவில்லை. பொதுமக்களின் நலன் கருதி, அறிவொளி நகர் ரேஷன் கடையை முழு நேரமாக செயல்பட கூட்டுறவு சொசைட்டி மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
புகார் மனுவை பெற்றுக்கொண்ட கூட்டுறவு சொசைட்டி அதிகாரி, இது குறித்து பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.

